செய்திகள்

அடுத்த படத்துக்காக ஹிந்திப் பட பிரபலத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார். 

DIN

சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார். 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.

டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவாங்கி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.  

இந்தப் படத்தையடுத்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் என்பவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு சிங்கப் பாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் டட்லி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ஜூங்கா, ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த பூமி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ், கோல்மால் 3 ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT