நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘வா டீல்’திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் அருன் விஜய் , கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘வா டீல்’ திரைப்படம் வரும் தீபாவளி (நவம்பர்-4) அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தை ஹேம்நாத் மோகன் தயாரித்துள்ளார். ஜே.எஸ்.கே நிறுவனம் வெளியிடுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே தயாரிப்பில் இருந்து நிதிப் பிரச்னை காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் 8 ஆண்டுகள் கழித்து திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.