செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய ருத்ர தாண்டவம் படக் காட்சி: வெளியான விடியோவால் உண்டான சலசலப்பு

DIN

ருத்ர தாண்டவம் படத்தில் இருந்து வெளியான ஸ்நீக் பீக் விடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் கௌதம் மேனன், தம்பி ராமையா, மனோபாலா, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று (செவ்வாய் கிழமை) ஸ்நீக் பீக் விடியோ வெளியாகியிருந்தது. இந்த விடியோவில், தேவாலயம் ஒன்றில் பாதிரியாரான மனோபாலா சொற்பொழிவு வழங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கதாநாயகன் ரிச்சர்டு ரிஷி மற்றும் தம்பி ராமையா, மனோபாலாவின் சொற்பொழிவை கேட்கின்றனர். அப்போது பேசும் மனோபாலா, சாத்தான்களை விரட்டியடிக்க எல்லோரிடமும் காணிக்கை கேட்பது போல் காட்டப்பட்டுள்ளது. 

கூட்டம் முடிந்ததும், மனோபாலாவிடம் ரிச்சர்டு ரிஷியும், தம்பி ராமையாவும், அவரது சொற்பொழிவு விடியோக்களை கேட்கிறார்கள். அதற்கு தன்னிடம் ஞானஸ்தானம் பெறு, உனக்கு தருகிறேன் என்று மனோபாலா பதிலளிக்கிறார்.

அப்போது ரிச்சர்டு ரிஷி ஒரு அரசு பணியாளர் என்றும், பணியில் இருந்து சேவையாற்றுவார்  என்றும் தம்பி ராமையா உறுதியளிப்பதாக அந்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கிறிஸ்துவ மதத்தை விமரிசிப்பது போல் உள்ளதாக சில கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT