பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவான ‘நோ டைம் டு டை’ திரைப்படம் நாளை(செப்-30) இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
இதையும் படிக்க | உலக அளவில் நிச்சயம் பார்க்கவேண்டிய 5 படங்கள் பட்டியலில் தனுஷின் கர்ணன் - சர்வதேச நாளிதழ் புகழாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்
’கேசினோ ராயல்’ ‘ஸ்பெக்டர்’ படங்களில் ஜேம்ஸ் பாண்ட் நாயகனாக நடித்த டேனியல் கிராய்க் ‘நோ டைம் டு டை’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்த நிலையில் கரோனா பாதிப்பால் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை(செப்-30) இப்படம் வெளியாகிறது.
மேலும், இது நடிகர் டேனியல் கிராய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வரும் அக்.8 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.