முகப்பு
செய்திகள்

''அண்ணனின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறேன்'' - சிவகார்த்திகேயன் யாரை சொல்கிறார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் உடன்பிறப்பே படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 12:44 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 'உடன் பிறப்பே' படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யாவின் தனது மனைவியுடன் இணைந்து, 'ஜெய்  பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படங்களை தயாரித்து வருகிறார். இதில் 'உடன் பிறப்பே' படத்தில் சசிக்குமார் - ஜோதிகா முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். 

மேலும், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி, நிவேதிதா சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல் ராஜ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை இரா.சரவணன் எழுதி, இயக்கியுள்ளார்.

Advertisement

இந்தப் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''இந்தப் படத்தின் இயக்குநர் இரா.சரவணன் அண்ணனின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.  நடிகர் சூர்யா, சசிக்குமார், ஜோதிகா, சூரி மற்றும் உடன்பிறப்பே படக்குழுவினருக்கு  வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.