முகப்பு
செய்திகள்

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மோசன் போஸ்டர் விடியோ வெளியானது

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மோசன் போஸ்டர் விடியோ வெளியானது.

Updated On : 10 டிசம்பர், 2021 at 4:52 PM
பகிர்:

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் என்ற வேடத்தை நியபாகப்படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். சுராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

முதலில் இந்தப் படத்துக்கு நாய் சேகர் என்று தான் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இதே பெயரில் சதீஷ் ஒரு படத்தில் நடித்திருந்ததால் இந்தப் படத்தின் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.