FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து பிரேமலதா விளக்கமளித்துள்ளார். 

28 ஜனவரி 2024, 11:16 am IST
பகிர்:

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் விஜயகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் கட்சிப் பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சி மட்டும் செய்து ஓய்வில் இருக்கிறார். 

அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments