ஹிந்தியில் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் பிக்பாஸ் மஹத்
பிக்பாஸ் மூலம் பிரபலமான மஹத், ஹிந்தி படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் மங்காத்தா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மஹத். தொடர்ந்து 'சென்னை 28 2', 'ஜில்லா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் மிகவும் பிரபலமானார்.
இதையும் படிக்க | மீண்டும் இணையும் இயக்குநர் அமீர் - யுவன் வெற்றிக் கூட்டணி !
நடிகர் சிம்புவின் நண்பரான இவர் அவருடன் விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது '2030' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்ததப் படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் மஹத் ஹிந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹூமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சத்ராம் ரமணி இயக்குகிறார்.