செய்திகள்

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

DIN

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி - நாகர்ஜுனா இணைந்து நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் ராஷ்மிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூருக்கு ரெட்; சென்னை, 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னையில் விடாத மழை! தேங்கி நிற்கும் தண்ணீர்! | TnRain

இது கோழைத்தனம்! சின்மயி மன்னிப்புக்குக் காட்டமான மோகன். ஜி!

நீரில் மூழ்கிய விளை நிலத்துக்கு நிவாரணம்! அமைச்சர் அறிவிப்பு!

தீவிர பயிற்சியில் தெலங்கானா முதல்வர்... டிச. 13-ல் மெஸ்ஸி அணியுடன் நட்புறவு போட்டி!

SCROLL FOR NEXT