வெளியானது 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் சும்மா சுர்ருனு விடியோ பாடல்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து சும்மா சுர்ருனு விடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, புகழ், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இதையும் படிக்க | விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்
Advertisement
Advertisement
இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து சும்மா சுர்ருனு என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அர்மான் மாலிக், நிகிதா காந்தி இந்தப் பாடலை பாடியிருந்தனர். திரையரங்கில் இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு இஈருந்தது குறிப்பிடத்தக்கது.