செய்திகள்

''எங்க அண்ணே..'' விஜய்யின் ரசிகன் என ஷாருக்கானின் பதிவுக்கு அட்லி பதில்

பீஸ்ட் டிரெய்லரை பாராட்டிய ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லி நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

இயக்குநர் அட்லி தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பீஸ்ட் டிரெய்லர் குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 

அதில், என்னைப் போல மிகப்பெரிய விஜய் ரசிகரான இயக்குநர் அட்லியுடன் அமர்ந்து பீஸ்ட் டிரெய்லரை பார்த்தேன். பீஸ்ட் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் அட்லி, என்னோட அண்ணே, என்னோட தளபதி விஜய் அண்ணாவின் பீ்ஸ்ட் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ஷாருக்கான் சார் என்று பதிலளித்துள்ளார். 

அனிருத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரின் காரணமாக பீஸ்ட் படத்துக்கு இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக பீஸ்ட் பட ஹிந்தி டிரெய்லரை பகிர்ந்த வருண் தவான், தான் ஒரு பெரிய விஜய் ரசிகன் என்பதை தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு அருகே ஆம்னி வேன் மோதி கூலி தொழிலாளி பலி

முதல்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா - கீர்த்தி சுரேஷ்..! பூஜை புகைப்படங்கள்!

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

புரட்டாசி சனிக்கிழமை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

SCROLL FOR NEXT