செய்திகள்

கே.எஸ்.ரவிக்குமாரின் 'கூகுள் குட்டப்பா' பாடலை வெளியிட்ட ராஜமௌலி

கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்திலிருந்து யாரோ பாடலை இயக்குநர் ராஜமௌலி பகிர்ந்துள்ளார். 

DIN

மலையாளத்தில் வெற்றிபெற்ற ஆண்டிராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகி பாபு, பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையேயான நட்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்திலிருந்து ஜிப்ரான் இசையில் யாரோ யாரோ என்ற பாடலை இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

SCROLL FOR NEXT