படம்: ட்விட்டர் | தனுஷ் 
செய்திகள்

கர்ணன் ஓராண்டு: தனுஷ், மாரி செல்வராஜ் கேக் வெட்டி கொண்டாட்டம் (படங்கள்)

கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

DIN


கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு ஆன நிலையில், நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்தாண்டு வெளியான திரைப்படம் கர்ணன். தமிழில் மிக முக்கியமானத் திரைப்படம் என்ற பாராட்டை கர்ணன் பெற்றது.

இந்தப் படம் வெளியான முதலாம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் இன்று (சனிக்கிழமை) கேக் வெட்டினர். கர்ணன் கதாபாத்திரம் வாளேந்தும் படத்தின் போஸ்டர் சிலையாக வடிவமைக்கப்பட்டு தனுஷுக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது.

அதன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளதாவது:

"கர்ணன் முதலாம் ஆண்டு. என் மனதிற்கு மிகமிக நெருக்கமானத் திரைப்படம். மாரி செல்வராஜ், தாணு, சந்தோஷ் நாராயணன் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் உருவானதற்கு மனதார நன்றிகள்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT