செய்திகள்

பூஜையுடன் துவங்கியது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' படப்பிடிப்பு - கதை இதுவா?

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 

DIN

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு இயக்குநர் வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ள படம் 'ஏகே 61'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இன்று (ஏப்ரல் 11) பூஜையுடன் துவங்கியது. 

இந்தப் படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதாம். இதற்காக ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

குறிப்பாக ஏகே 61 படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. காரணம் வலிமை படத்தின்போது யுவனுடன் இயக்குநர் வினோத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வலிமை படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT