நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ஜெய்யின் 'குற்றம் குற்றமே' பாடல் இதோ
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள குற்றம் குற்றமே திரைப்படம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே என இரண்டு படங்களில் நடித்தார். இதில் வீரபாண்டியபுரம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில் குற்றம் குற்றமே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஏப்ரல் 14 ஆம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், திவ்யா துரைசாமி, ஸ்மிருதி வெங்கட், அருள் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | பூஜையுடன் துவங்கியது நடிகர் அஜித்தின் 'ஏகே 61' படப்பிடிப்பு - கதை இதுவா?
Advertisement
அஜீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில் இந்தப் படத்திலிருந்து மாமன் மகளே என்ற பாடல் வெளியாகியுள்ளது.