செய்திகள்

பாடகர் வேல்முருகனின் மகள் கின்னஸ் சாதனை - முதல்வர் வாழ்த்து

கின்னஸ் சாதனை படைத்த பாடகர் வேல்முருகனின் மகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

DIN

நாட்டுப்புற பாடகரான வேல்முருகன் சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க குலுங்க பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்துவைத்தார். இவர் பாடிய பாடல்களில் 'நாடோடிகள்' பட ஆடுங்கடா மச்சான், 'ஆடுகளம்' பட ஒத்த சொல்லால, 'கழுகு' பட ஆம்பளைக்கும் போன்ற பாடல்கள் பெரும் வெற்றிபெற்றதன் காரணமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

கடைசியாக ஜி.வி.பிராகஷ் இசையில் 'அசுரன்' படத்தில் கத்தரிப்பூவழகி பாடலை பாடியிருந்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேல்முருகன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். 

இந்த நிலையில் வேல்முருகனின் மகள் ரக்சனா ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் பாடகர் வேல்முருகன் தனது குடும்பத்தினருடன்  முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர் பாடகர் வேல்முருகனின் மளை கின்னஸ் சாதனை படத்தமைக்காக வாழ்த்தினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT