செய்திகள்

திடீரென ட்விட்டர் படத்தை மாற்றிய ரஜினிகாந்த்: பின்னணி என்ன?

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் படத்தை மாற்றியதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பெரும்பாலும் பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை கருத்துக்களே அதிகம் கிடைத்தன. 

இதன் ஒரு பகுதியாக பீஸ்ட் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் இயக்குநரை மாற்ற முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய படங்களான 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' படங்களின் வரிசையில் 'தலைவர் 169' படத்தையும் இணைத்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 'தலைவர் 169' பட அறிவிப்பு படத்தை பதிவேற்றியுள்ளார். இதனால் 'தலைவர் 169' படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. 

'தலைவர் 169' படத்துக்கு அனிருத் இசையமைப்பது மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தத் தகவல்களும் தெளிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT