செய்திகள்

ரஜினி, விஜய் படங்களின் தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ராமா ராவ் மரணம்

பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.ராமா ராவ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 

DIN

ரஜினிகாந்த் நடித்த 'நான் சிகப்பு மனிதன்', விஜய் நடித்த 'யூத்', விக்ரம் நடித்த 'தில்' ஆகிய படங்களை தயாரித்தவர் டி.ராமா ராவ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். 

தயாரிப்பாளர் டி.ராமா ராவ் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(ஏப்ரல் 20) காலமானார். அவருக்கு வயது 83. 

ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்சன்ஸ் சார்பாக 'தில்', 'யூத்', 'உனக்கும் எனக்கும்', 'மலைக்கோட்டை' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். டி.ராமா ராவின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT