நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் - செல்வராகவனின் 'சாணிக் காயிதம்' - டீசர் இதோ
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சாணிக்காயிதம் பட டீசர் வெளியானது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'ராக்கி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'சாணிக் காயிதம்'. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் என 3 தலைமுறையினர் நடித்த 'ஓ மை டாக்' - திரை விமர்சனம்
இந்த நிலையில் 'சாணிக் காயிதம்' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு யாமினி யுகமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரில் கருப்பு வெள்ளை காட்சிகள், வன்முறை என அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ராக்கி படத்தை அதிகம் நினைவுபடுத்துகின்றன.