செய்திகள்

யூடியூப்பில் ’அரபிக் குத்து’ பாடல் புதிய சாதனை

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் பெற்றுள்ளது.

DIN

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்  விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ’அரபிக் குத்து' பாடல் யூடியூப்பில் 20 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் பெற்றுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.  இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இதையும் படிக்க | ஏற்கனவே திருமணமானதை மறைத்து வாலிபரை ஏமாற்றிய நடிகை

பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக அரபிக் குத்து வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது. இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. 

அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். ரௌடி பேபி, புட்ட பொம்மா பாடல்களுக்கு நடனம் அமைந்த ஜானி இந்தப் பாடலுக்கும் நடனம் அமைத்திருந்தார். இந்த நிலையில் ’அரபிக் குத்து’ விடியோ பாடல் யூடியூப்பில் 200 மில்லியன்(20 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாய்ச்சல்... பாயல் ராதாகிருஷ்ணா!

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

க்யூட்... அனஸ்வரா ராஜன்!

SCROLL FOR NEXT