செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். 

DIN

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். 

முதல் படத்திலேயே தயாரிப்பாளர் சூர்யா, ஹீரோ கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் என ஒரு பெரும் பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கிறார் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளாக களமிறங்கியிருக்கும் அதிதி சமீபத்தில் மருத்துவராக பட்டம்பெற்றுள்ளார். 

விருமன் படத்தின் டிரெய்லர் மதுரையில் ஷங்கர், நடிகர் சூர்யா முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதி பாடியுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இப்படி ஒரு அறிமுகம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் அதிதியின் அடுத்தப் படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதிதி அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். 

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில்தான் அதிதி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தேசிய விருதும் பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT