செய்திகள்

தனுஷின் நடிப்பு குறித்து கரீனா கபூர் கருத்து - வைரலாகும் விடியோ

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆடுகளம், அசுரன் படங்களுக்காக இரண்டுமுறை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே, ஆங்கிலத்தில் தி கிரே மேன் என உலக அளவில் அறியப்பட்ட நடிகராக இருக்கிறார். 

தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் தமிழ் படங்கள் குறித்து பேசும்போதெல்லாம் தனுஷின் நடிப்பு குறித்து பாராட்டத் தவறுவதில்லை. 

அந்த வகையில் நடிகை கரீனா கபூர், தனுஷ் மிகச்சிறந்த நடிகர், ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பை பார்க்கும்போது வேற லெவலில் இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார். 

கரீனா கபூரின் கணவரான சயீப் அலிகானின் மூத்த மகளான சாரா அலிகானுடன் அட்ராங்கி ரே படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT