செய்திகள்

பிரபல நடிகையைக் காதலிக்கிறாரா? நாக சைதன்யா என்ன சொல்கிறார் ?

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகையைக் காதலித்துவருவதாக கூறப்படுவது குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

DIN

சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகையைக் காதலித்துவருவதாக கூறப்படுவது குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

தமிழில் அலை, யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் தேங்க் யூ என்ற படத்தை இயக்கியிருந்தார்.  நாக சைதன்யா நடித்துள்ள இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களின் அதிருப்தியை சந்தித்தது.

இந்தப் படத்தையடுத்து நாக சைன்யா அடுத்ததாக அமீர் கானுடன் இணைந்து லால் சிங் சத்தா படத்தில் நடித்துள்ளார். ஃபாரஸ்ட் கம்ப் என்ற ஆங்கில பட ரீமேக்கான இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

இந்தப் படம் தொடர்பாக யூடியூப் பக்கம் ஒன்றுக்கு நாக சைதன்யா பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நடிகை சோபிதா என்பவரை காதலிப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு ''நான் சிரிப்பையே பதிலாக தருகிறேன், வதந்திகளுக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

நடிகை சோபிதா தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாக சைதன்யாவும் சோபிதாவும் நிறைய இடங்களுக்கு ஜோடியாக சென்று வர, இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

SCROLL FOR NEXT