செய்திகள்

சிவகார்த்திகேயன் சூர்யாவுக்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா - அதிகாரப்பூர்வ தகவல்

DIN

அடுத்ததாக பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் படம் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் களமிறங்கினார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடனமாடிய செல்லம்மா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் கலக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம். அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நட்டி என்கிற நடராஜன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை இன்று(ஆகஸ்ட் 3) நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் அகற்றம்

குமரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

நடுக்காட்டில் பதுக்கிய 2,000 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு

தந்தைக்கு கத்தி குத்து: இளைஞா் கைது

SCROLL FOR NEXT