செய்திகள்

'தி கிரே மேன் 2' - தனுஷ் வெளியிட்ட ஆடியோ - நீங்க தயாரா ?

தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து  நடிகர் தனுஷ் ஆடியோ மூலம்  சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். 

DIN

தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து  நடிகர் தனுஷ் ஆடியோ மூலம் சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். 

நடிகர் தனுஷ் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த 'தி கிரே மேன்' ஆங்கில படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை 'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர். 

தனுஷ் நடித்துள்ளதால் இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தனுஷின் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

இந்த நிலையில் 'தி கிரே மேன்' பட இரண்டாம் பாகத்தை அதன் இயக்குநர்களான ருசோ பிரதர்ஸ் அறிவித்தனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவானது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் தனுஷ் ஆடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ''தி கிரே மேன் உலகம் பெரிதாகிறது. இரண்டாம் பாகம் தயாராகிறது. லோன் வோல்ஃப் தயார். நீங்கள்?'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரது பதிவைப் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

SCROLL FOR NEXT