செய்திகள்

ஆமிர் கான் படத்தில் நடிக்க மறுத்தாரா விஜய் சேதுபதி? - நாக சைதன்யா விளக்கம்

ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நாக சைதன்யா நடித்திருந்த வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. 

DIN


ஆமிர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நாக சைதன்யா நடித்திருந்த வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. 

ஆங்கிலப் படமான ஃபாரஸ் கம்ப் படத்துக்கு உலக அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்தப் படத்தை ஹிந்தியில் ஆமிர் கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. 

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதலில் இந்தப் படத்தில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. திடீரென விஜய் சேதுபதி விலக அவருக்கு பதிலாகவே நாக சைதன்யா அந்த வேடத்துக்கு ஒப்பந்தமானார். 

விஜய் சேதுபதி ஏன் விலகினார் என்பதற்கு சரியான காரணம் தெரியாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் லால் சிங் சத்தா குறித்து பேட்டியளித்த நாக சைதன்யா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான் முதலில் ஒப்பந்தமானார்.

ஆனால் அவருக்கு பிற படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் படத்துக்காக நாட்களை ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. இதனால் தயாரிப்பாளர்களிடம் கூறி விலகி விட்டார். என்றார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT