கார்த்தியின் 'விருமன்' - தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்
கார்த்தியின் விருமன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீடு குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
கார்த்தியின் விருமன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீடு குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையா - கார்த்தி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. திரையரங்குகளில் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இருப்பினும் குடும்ப ரசிகர்களைப் இந்தப் படம் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்
இந்த நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவியும், ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் தளமும் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.