முகப்பு
செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி இயக்கும் படம் - ஹீரோ யார் தெரியுமா ?

10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திரைப்படம் ஒன்றை இயக்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திரைப்படம் ஒன்றை இயக்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி சின்மயி நாயர். இவர் தற்போது கிளாஸ் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறாராம். இந்தப் படத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கிறார். 

இந்தப் படத்தை சபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு பென்னி ஜோசஃப் ஒளிப்பதிவு செய்ய மனு ஷஜு படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஆர்.சுராஜ் இசையமைக்கிறார். 

Advertisement

இந்தப் படத்துக்கு அனில் ராஜ் கதை எழுத, விஜய் யேசுதாஸுடன் சுதீர், மீனாட்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments