செய்திகள்

'பா.ரஞ்சித் படத்துக்காக...' - விடியோ மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். 

DIN

நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். 

நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. கடந்த மாதம் விக்ரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதீத காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது அவரது ரசிகர்களுக்கு கவலையை அளித்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்துகொண்டு ரசிகர்களிடம் உரையாடினார். 

இந்த நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார். நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது, ''நான் சீயான் விக்ரம். நானே தான். மாறுவேடத்தில் இல்லை. தற்போது ரஞ்சித் படத்துக்காக தயாராகிட்டு இருக்கேன். அதனால பயந்துடாதீங்க. 

ட்விட்டரில் இருந்தா நேரடியா ரசிகர்களிடம் பேசலாம், தகவல்களைத் தெரியப்படுத்தலாம். அப்படினு என்கிட்ட சொன்னாங்க. ஆனால் நான் கொஞ்சம் தாமதாமாக வந்திருக்கிறேன். 10, 15 ஆண்டுகள் தாமதம். 

இதெல்லாம் விட இந்த உலகத்துல அவ்ளோ அன்பு இருக்கு என எல்லோரும் பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை நாமும் கொஞ்சம் அனுபவிக்கலாமே என ட்விட்டருக்கு வந்திருக்கிறேன் என்று அந்த விடியோவில் விக்ரம் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT