முகப்பு
செய்திகள்

விருமன் வெற்றி - யுவனுக்கு தயாரிப்பாளர் அளித்த கௌரவம்

விருமனின் வெற்றியை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு தயாரிப்பாளர் மரியாதை செய்துள்ளனர். 

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:01 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படம் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் இந்தப் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இசையமைப்பாளர் யுவனின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதனையடுத்து இசையமைப்பாளர் யுவனுக்கு மரியாதை செய்யும் விதமாக தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் மற்றும் விநியோகஸ்தர் சக்தி வேலன் யுவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். இது யுவன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.