செய்திகள்

சிம்பு காட்டிய அலட்சியம் - ஆர்ஜே பாலாஜியைத் தேர்ந்தெடுத்த இயக்குநர்

சிம்பு படம் கைவிடப்பட்டதால் ஆர்ஜே பாலாஜி படத்தை பிரபல இயக்குநர் கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

சிம்பு படம் கைவிடப்பட்டதால் ஆர்ஜே பாலாஜி படத்தை பிரபல இயக்குநர் கையிலெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் நல்ல வெற்றியைப் பதிவுசெய்தது. 

இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கொரோனா குமார் என்ற பெயரில் உருவாகவிருப்பதாகவும் சிம்பு இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கடந்த ஆண்டு வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்திருந்தது. 

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் இருக்கும் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் பரபரப்பாக நடிக்கத் துவங்கியுள்ளார். இந்தப் படங்களையடுத்து கொரோனா குமார் படத்தின் படிப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் கோகுல் படம் குறித்து தகவல் ஒன்று உலா வருகின்றது. அதாவது இயக்குநர் கோகுல் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம். இதற்கான அதிகராப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பாராக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

SCROLL FOR NEXT