செய்திகள்

தேசிய கட்சியில் இணையும் திரிஷா?

நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. 

DIN

நடிகை திரிஷா தேசிய கட்சி ஒன்றில் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. 

தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் தளபதி 67 படத்தில் பாடல்களோ, காதல் காட்சிகளோ இல்லாமல் முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. 

பொன்னியின் செல்வனை நடிகை திரிஷா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். காரணம் பொன்னியின் செல்வனில் அவர் நடித்துள்ள குந்தவை கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்நாவலை படித்தவர்கள் அனைவரும் அறிவர்.

பொன்னியின் செல்வன் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் திரிஷா அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக திரிஷாவுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால் இதனை திரிஷாவின் அம்மா மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாய்க்காலில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

சிவகாசி சுற்று வட்டச் சாலையை எம்.எல்.ஏ.ஆய்வு

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

SCROLL FOR NEXT