முகப்பு
செய்திகள்

தனுஷ் படத்துக்கு அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

தனுஷ் நடிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தனுஷ் நடிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழ் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள ஆங்கிலப்படமான தி கிரே மேன் படம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். 

அவரது பதிவில், ''நேற்று 'தி கிரே மேன்' படம் பார்த்து மகிழ்ந்தேன். நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்தது குறித்து பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷ் மேலும் பல பெருமைகளை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வேண்டுமென அவரை வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ருசோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாகவும், தனுஷ் நடிக்கவிருப்பதாக இயக்குநர்கள் ருசோ பிரதர்ஸ் அறிவித்தனர். 

மேலும் தற்போது தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தனுஷ் நடிப்பை அன்புமணி ராமதாஸ் பாராட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.