செய்திகள்

'இந்தியன் 2'வில் விவேக்கிற்கு பதிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா ?

இந்தியன் 2 வில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

இந்தியன் 2 வில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (ஆகஸ்ட் 24) துவங்கி நடைபெற்றுவருகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்தப் படத்தை விரைவாக முடித்துவிட்டு ராம் சரண் படத்தை ஷங்கர் மீண்டும் தொடரவிருக்கிறார். 

கமல்ஹாசன் தற்போது வயதான தோற்றத்துக்கான ஒப்பனைக்காக அமெரிக்காவில் இருக்கிறார். அவர் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பிடிப்பில் கலந்துகொள்விருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 இருந்திருக்கும். 

குரு சோமசுந்தரம்

ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகர் விவேக் மறைந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக வேறு யார் நடிப்பார்கள் என்ற கேள்வி  எழுந்தது. தற்போது குரு சோமசுந்தரம் விவேக்கின் வேடத்தில் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT