செய்திகள்

’இந்தியன் 2’ புதிய போஸ்டர் வெளியீடு

’இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

’இந்தியன் 2’ திரைப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர்கள் பிரச்னையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது  ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்துக்காக அமெரிக்காவில் ஒப்பனைக் கலைஞர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தோற்றப் போஸ்டரைப் ’ஹி இஸ் பேக்’(he is back) என்கிற வசனத்துடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்தியன் தாத்தா கதாபாத்திரமான சேனாதிபதியின் தோற்றத்தை மீண்டும் நினைவுபடுத்தும்படியாக இருக்கிறது புதிய போஸ்டர். படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT