செய்திகள்

''என் இனிய....'' - பாரதிராஜா குணமாக நடிகை ராதிகா உருக்கமாக பிரார்த்தனை

பாரதிராஜா விரைவில் குணமாக நடிகை ராதிகா பிரார்த்தனை செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

பாரதிராஜா விரைவில் குணமாக நடிகை ராதிகா பிரார்த்தனை செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பாரதிராஜா தற்போது உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கவலைப்பட ஏதுமில்லை எனவும் நான்கு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் பாரதிராஜா விரைவில் குணமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சர்ச் ஒன்றில் நடிகை ராதிகா மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளார். அதனை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோவாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,  என் இனிய இயக்குநர் பாரதிராஜா அவர்களே, நீங்கள் விரைவில் குணமடைய எனது சிறப்பு பிரார்த்தனை. 

நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும். உங்களை விரைவில் காண வேண்டும். ஆரோக்கியமாக இருங்கள். உங்களிடம் பேசுவதை மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் ரசிகர்கள் பலரும் பாரதிராஜா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நடிகை ராதிகாவை கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கும் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT