முகப்பு
செய்திகள்

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 31 அக்டோபர், 2022 at 2:04 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:39 PM

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Advertisement

இந்தத் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், காதல் மற்றும் நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருப்பதால் இப்படத்திற்கு தணிக்கைத் துறை ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. 

’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.