செய்திகள்

சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் பற்றி சிவகார்த்திகேயன் கருத்து - வைரலாகும் விடியோ

சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சிவகார்த்திகேயன் எப்பொழுதும் நல்ல படங்களைப் பாராட்டத் தவறுவதில்லை. அந்த வகையில் ஆமிர் கானின் 'லால் சிங் சத்தா' படம் பார்த்த சிவகார்த்திகேயன் ஊடகங்களின் முன்பாக தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். 

அந்த வகையில் அருள் நிதியின் 'டைரி' படம் பார்த்த சிவகார்த்திகேயன் தனது கருத்துக்களை  பதிவு செய்துள்ளார். டைரி படம் குறித்து அவர் பேசியதாவது, ''கடைசி பத்து நிமிடங்களை என்னால் கணிக்க முடியவில்லை. எனக்கு மிகவும் பிடித்தது அந்த காட்சிகள்தான். அந்த அளவுக்கு மிகக் கோர்வையாக அந்தக் காட்சிகளை உருவாக்கியிருந்தார்கள். 

இந்த மாதிரி கதையை எழுதுவது எவ்வளவு கடினமோ, அதனை எடுப்பது அதனை விட கடினம். எல்லோரின் பங்களிப்பும் சரியாக இருந்தால்தான் ஒரு நல்ல திரில்லர் படத்தை உருவாக்க முடியும்.

திரில்லர் ஸ்பெஷலிஸ்ட் என்ற  பெயரை அருள்நிதிக்கு கொடுக்கலாம். இந்த மாதிரி கதையை அவர் சரியாக தேர்ந்தெடுக்கிறார். அவரது வெற்றிபெற்ற திரில்லர் படங்களின் வரிசையில் டைரியும் இடம் பிடிக்கும்'' என்றார். 

இந்த விடியோவை இயக்குநர் இன்னாசி பாண்டியன் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயா்: சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

நகைக் கடனைப் புதுப்பிக்க வங்கிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகாா்!

கோட்டக்குப்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கொலை மிரட்டல் வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தோ்வு கட்டண உயா்வை கண்டித்து அரசுக் கல்லூரி மாணவா்கள் மறியல்!

SCROLL FOR NEXT