செய்திகள்

விஜய் டிவி தொடரிலிருந்து திடீரென விலகும் நடிகை - வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவித்துள்ளார்.

DIN

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை அர்ச்சனா அறிவித்துள்ளார். 

விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே மிக பிரபலம். இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 

முதல் பாகத்தின் பெரும் வெற்றியால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகம் ஒளிரப்பாகிவருகிறது. இந்தத் தொடரில் முதல் பாகத்திலிருந்து ஆல்யா மானஸா மட்டும் நடிக்கத் துவங்கினார். ஆனால் சில காரணங்களால் அவர் பாதியில் விலக அவருக்க பதிலாக ரியா விஸ்வநாத் நடிக்கிறார். 

இந்தத் தொடரில் விஜே அர்ச்சனா முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். ராஜா ராணி 2 தொடர் மூலம் அவரை ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்ரனர். இந்த நிலையில் அவர் திடீரென இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

அவரது பதிவில், வாழ்க்கை நம் எல்லோருக்கும் பை நிறைய ஆச்சரியங்களை ஒழித்துவைத்திருக்கும். இப்போது வாழ்க்கையின் அடுத்தகட்ட திட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய தருணம். நான் ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகுகிறேன். 

இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. என் புதிய பயணத்தில் உங்களது ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எதனால் விலகுகிறார், வேறு என்ன சீரியலில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு பதிலாக களமிறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு| செய்திகள்: சில வரிகளில் | 3.10.25

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்!

அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடித்து வருகிறார் விஜய் - அப்பாவு

தவறு செய்தோர் தப்பிக்க பயன்படுத்தும் Washing machine பாஜக! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT