செய்திகள்

நலம் பெற்று வருகிறேன்:இயக்குநா் பாரதிராஜா

DIN

 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநா் பாரதிராஜா அறிக்கை ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டாா். அதில் தாம் நலம் பெற்று வருவதாக தெரிவித்துள்ளாா்.

இயக்குநா் பாரதிராஜாவுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். “நீா்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவா்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தினா். அதன்படி சிகிச்சை பெற்று வருகிறாா். ‘அப்பாவின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது’ என்று அவரது மகன் மனோஜ் தெரிவித்திருந்தாா். பின்னா், குடும்பத்தினா் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு இயக்குநா் பாரதிராஜா மாற்றப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்தநிலையில், இயக்குநா் பாரதிராஜா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ‘என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிராா்த்தித்த அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றி. விரைவில் சந்திப்போம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT