நடிகர் விஜய்யின் தளபதி 67 படத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் 'வாரிசு' படத்தை விட தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்புதான் ரசிகர்களிடையே அதிகமாக இருந்துவருகிறது. காரணம் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி.
லோகேஷ் இப்பொழுதுதான் கதை எழுதும் பணியில் ஈடுபட்டுவருகிறார். அதற்குள் இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா நடிக்கிறார், சமந்தா நடிக்கிறார் என ஏகப்பட்ட தகவல்கள் நாளுக்குநாள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
இதையும் படிக்க | மீண்டும் ஆஸ்கர் தொகுப்பாளர் வாய்ப்பு: கிரிஸ் ராக் நிராகரிப்பு
இதன் ஒரு பகுதியாக மலையாளப் படமொன்றில் இடம்பெற்ற நாய் ஒன்று 'தளபதி 67' படத்தில் தோன்றவிருக்கிறதாம். அந்த நாயின் உரிமையாளர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் படத்தில் தனது நாயை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், டிசம்பர் மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அழைப்பவிடுக்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கவிருப்பது உறுதியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.