செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது விஜய்-67 படம்

விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.

DIN

விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இந்தப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிப்பார் என ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது. 

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது. மேலும் விஜய் 67 பட அறிவிப்பு டீசர் படப்பிடிப்பிற்காக பிரசாத் லேப்பில் இரண்டு செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடலாம் எனத் தெரிகிறது. விஜய் 67 படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பின்னணியில் தயாராக உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் 2019ல் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் செஷல்ஸ் அதிபர்! முதல் இந்திய பயணம்!

போலி ஆவண வழக்கில் அல் ஃபலாஹ் பல்கலை தலைவர் கைது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,640 குறைந்தது! வெள்ளி கிலோ ரூ. 20,000 குறைவு!!

பிப். 28 - தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT