செய்திகள்

தனுஷ் படப்பிடிப்பில் இணைந்த சூப்பர் ஸ்டார்!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

DIN

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். 

மேலும், தென்காசியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தனுஷின் அண்ணனாக ஷிவ் ராஜ்குமார் நடிக்க உள்ளார்.

1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர்  உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களைப்போல் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT