செய்திகள்

’அவருக்கு இது பிடிக்காது..’ நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து

நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர். 

வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. 

திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும், டிசம்பர் 9ஆம் தேதி அஜித்குமாரின் அறிமுக பாடலான ‘ஜில்லா..ஜில்லா’ வெளியாகிறது. இதனை போனி கபூர் தனது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் நேர்காணல் ஒன்றில், ‘ஒருவர் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக ஒட்டுமொத்தத் தொழிலையே பொதுமைப்படுத்தாதீர்கள். அஜித் சாருக்கு கூட இப்படி தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கிப் பேசுவது பிடிக்காது. அவரைப் பொறுத்தவரை படத்தின் வெற்றி, தோல்வி முக்கியம் இல்லை. படக்குழுவினர் நேர்மறையான சிந்தனையுடன் இருக்க வேண்டும். மதிக்கப்பட வேண்டும். வெற்றி வரும் போகும் அதற்காக மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்பார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT