செய்திகள்

துணிவு முதல் பாடல் ‘லீக்’? அதிர்ச்சியில் படக்குழு!

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. 

DIN

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ளனர். 

ஜிப்ரான் இசையில் ''சில்லா.. சில்லா..'' எனத் தொடங்கும் பாடலை அனிருத் பாடியுள்ளார். அஜித் குமாரின் அறிமுக பாடலாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. வலிமை படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்திற்காக இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. 

துணிவு படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இணையத்தில் அனிருத் குரலில் சில நிமிடங்கள் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ஆனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர். ‘ஆலுமா டோலுமா’ பாடல் போலவே இந்த பாடலும் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி

சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி அதிகரிப்பு! அமெரிக்க ஏற்றுமதி குறைவு!!

மகள் உயிருக்கு ஆபத்து! கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான மருத்துவ மாணவியின் பெற்றோர் கதறல்!!

SCROLL FOR NEXT