முகப்பு
செய்திகள்

விரைவில் அருவா படப்பிடிப்பு?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ‘அருவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:03 AM
பகிர்:

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ‘அருவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா '’எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தம்பி சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்கிறார். இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இப்படத்திற்குப் பதிலாக முன்பு இயக்குநர் ஹரி இயக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த ’அருவா’ படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →