முகப்பு
செய்திகள்

வெளியானது ‘பாபா’: கொட்டும் மழையிலும் ரசிகர்கள் கொண்டாட்டம்!

பாபா அதிகாலைக் காட்சியை ரசிகர்கள் மழையிலும் கொண்டாட்டத்துடன் கண்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:

பாபா அதிகாலைக் காட்சியை ரசிகர்கள் மழையிலும் கொண்டாட்டத்துடன் கண்டனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து வெளியிட்ட படம் பாபா. இந்த படத்தை அண்ணாமலை, வீரா, பாட்ஷா படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.

ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், முக்கிய வேடங்களில் ரியாஸ் கான், கவுண்டமணி, தில்லி கணேஷ், சுஜாதாம் நம்பியார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாபா படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளான நிலையில், மீண்டும் மறு படத்தொகுப்பும் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு படத்தை புதுப்பொழிவுடன் மேம்படுத்தி இன்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மழையிலும் ரசிகர்கள் அதிகாலைக் காட்சியில் நடனமாடி கொண்டாட்டத்துடன் இப்படத்தைக் கண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →