செய்திகள்

ஜீவாவின் ‘பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல’ பாடல் வெளியானது! 

DIN

ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப்படத்தின் ‘பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல’ பாடல் வெளியாகியுள்ளது. 

ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படம் வருகிற டிச.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ளார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, இசை - ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான்.  

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், படத்திலிருந்து ‘பொத்தி பொத்தி வளத்த மேகல’ பாடல் வெளியாகியுள்ளது.  சந்தோஷ் ராஜன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். வடிவேலுவின் நகைச்சுவை வசனத்தில் இருந்து இந்தப் பாடல் வரிகளை எழுதியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT