செய்திகள்

ராம் சரண் வெளியிட்ட நற்செய்தி! 

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.  

DIN

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார்.  

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் இணைந்து தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வ தகவல் வெளியானது. 

திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஜூலையில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் நிகழ்ச்சியில் ராம் சரணின் மனைவி உபசனா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய உபசனா, ''நானும் என் கணவர் ராம் சரணும் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறோம். எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை” என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் ராம்சரண் தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு நற்செய்தியை பகிர்ந்துள்ளார். அவருக்கும் அவரது மனைவி உபசனாவுக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதென அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில், “ஸ்ரீ அனுமான் அவர்களின் ஆசியுடன், ராம் சரண் & உபசனா அவர்களின் முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சிரஞ்சீவி குடும்பத்தினர்” என பதிவிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு முதல் குழந்தை பிறக்க போவது உறுதியானதால் ரசிகர்கள் ட்விட்டரில் ராம்சரண் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொரசாமி

தமிழா... நீ முன்னோடி!

கைலாஷ் - மானசரோவர் யாத்திரை நிறைவு!

ஐந்தாவது சுதந்திரம்

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT