செய்திகள்

‘ஹாப்பி பர்த்டே பாப்பா. லவ் யூ’- ரெஜினாவை காதலிக்கிறாரா இந்த நடிகர்?

நடிகை ரெஜினாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாநகரம் பட நடிகர். இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி. 

DIN

நடிகை ரெஜினாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாநகரம் பட நடிகர். இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி. 

கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாநகரம்’ என்ற படத்தில் நடித்து மிகவும் புகழ்பெற்றார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞசம் மறப்பதில்லை படத்தில் இவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்து வருகிறார். ஓடிடியிலும் இவரது படங்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது.

மாநகரம் படத்தில் நடிகர் சுதீப் கிஷனுடன் சேர்ந்து நடித்தார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரெஜினாவுக்கு சுதீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாப்பி பர்த்டே பாப்பா. லவ் யூ. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டுமென ஆசிர்வதிக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இரு” என இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். 

இதற்கு தெலுங்கு ரசிகர்கள், “அண்ணோவ் மாஸ்ணா நீ”, “இருவருக்கும் எப்போது கல்யாணம்?”, “கோட் வேர்ட் அக்சப்டட்” என ரசிகர்கள் கலகலப்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சமீபத்தில் மஞ்சிமா, கௌதம் கார்த்திக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த வரிசையில் இவர்களும் வருவார்களா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT